/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பள்ளி சீருடை தயாரிப்பு பணி தனியாருக்கு வழங்க எதிர்ப்பு பள்ளி சீருடை தயாரிப்பு பணி தனியாருக்கு வழங்க எதிர்ப்பு
பள்ளி சீருடை தயாரிப்பு பணி தனியாருக்கு வழங்க எதிர்ப்பு
பள்ளி சீருடை தயாரிப்பு பணி தனியாருக்கு வழங்க எதிர்ப்பு
பள்ளி சீருடை தயாரிப்பு பணி தனியாருக்கு வழங்க எதிர்ப்பு
ADDED : ஜூன் 17, 2024 03:27 AM
திருப்போரூர் : அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சீருடைகளை தயாரிக்கும் பணியில், சமூக நலத்துறையின் கீழ் செயல்படும், பெண்கள் கூட்டுறவு சங்கங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
அதன் வாயிலாக, ஏராளமான பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்தே சீருடைகளை தைத்து கொடுத்து, வருமானம் ஈட்டி வந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் கீழ், 200க்கும் மேற்பட்ட பெண்கள், இந்த பள்ளி சீருடைகளை தைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், இந்த ஆண்டுக்கான பள்ளி சீருடை தைக்கும் பணி வழங்கப்படவில்லை எனவும், இப்பணியை தனியாருக்கு கொடுத்துள்ளதாகவும் கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், நேற்று திருப்போரூர் பகுதியில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
மேலும், அரசு பள்ளி சீருடை தைக்கும் பணியை, மீண்டும் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டி வலியுறுத்தப்பட்டுள்ளது.
சங்கத்தின் மாவட்ட செயலர் புஷ்பலதா, மாவட்ட துணை செயலர் லிங்கன், மாவட்ட குழு உறுப்பினர் வேளாங்கண்ணி, கன்னியம்மாள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், திருப்போரூர் பகுதிகளில் கையெழுத்து வாங்கி, அரசுக்கு அனுப்பி வைத்தனர்.