/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அடுத்தடுத்து வாகனங்கள் மோதல் ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல் ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல்
அடுத்தடுத்து வாகனங்கள் மோதல் ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல்
அடுத்தடுத்து வாகனங்கள் மோதல் ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல்
அடுத்தடுத்து வாகனங்கள் மோதல் ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல்
ADDED : ஜூன் 17, 2024 03:30 AM

செங்கல்பட்டு : சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை, தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலை.
இந்த சாலையில், தாம்பரம் மார்க்கத்தில், பரனுார் சுங்கச்சாவடி அருகில், நேற்று மதியம் அரசு பேருந்து மற்றும் இரண்டு கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், பேருந்தின் முன் பக்க கண்ணாடி சுக்குநுாறாக உடைந்து, கார்களின் பின் பக்கம் அப்பளம் போல நொறுங்கியது.
விபத்தில் பாதிக்கப்பட்ட வாகனங்கள் சாலையின் நடுவே நிறுத்தப்பட்டதால், அடுத்தடுத்து வந்த வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, வாகன ஓட்டிகள் செங்கல்பட்டு மார்க்க சாலையில், எதிர்திசையில் வாகனங்களை இயக்கியதால், சாலையின் இருபுறமும், ஒரு மணி நேரத்திற்கு மேலாக நெரிசல் ஏற்பட்டு, மகேந்திரா சிட்டி, பரனுார், புலிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
விபத்து நடைபெற்ற இடத்திற்கு, செங்கல்பட்டு தாலுகா போலீசார் செல்ல தாமதமானதால், மகேந்திரா சிட்டி சாலை சந்திப்பில் பணியில் இருந்த மறைமலை நகர் போக்குவரத்து போலீசார், விபத்து நடந்த இடத்திற்கு சென்று, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.