/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பிளாஸ்டிக் பாட்டில் துாளாக்க மாமல்லையில் புதிய இயந்திரம் பிளாஸ்டிக் பாட்டில் துாளாக்க மாமல்லையில் புதிய இயந்திரம்
பிளாஸ்டிக் பாட்டில் துாளாக்க மாமல்லையில் புதிய இயந்திரம்
பிளாஸ்டிக் பாட்டில் துாளாக்க மாமல்லையில் புதிய இயந்திரம்
பிளாஸ்டிக் பாட்டில் துாளாக்க மாமல்லையில் புதிய இயந்திரம்
ADDED : ஜூன் 18, 2024 11:48 PM

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை காண வரும் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
சுற்றுலா வரும் பயணியர், குளிர்பானம், குடிநீர் உள்ளிட்டவற்றை அருந்திவிட்டு, காலி பிளாஸ்டிக் பாட்டில்களை திறந்தவெளியில் ஏறிவதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனம், பேரூராட்சி நிர்வாகம் வாயிலாக, ஐந்து ரதங்கள், கடற்கரை சாலை ஆகிய இடங்களில், கடந்த ஆண்டு பிளாஸ்டிக் பாட்டில்களை துாளாக்கும் இயந்திரத்தை நிறுவியது.
அதன் பயன்பாட்டிற்கு மின் இணைப்பு அளிப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, அத்திட்டம் கைவிடப்பட்டு வீணானது.
தற்போது, அதே நிறுவனத்தின் மற்றொரு பிரிவினர், பசுமை மற்றும் பாரம்பரியம் பாதுகாப்பு பகுதி திட்டத்தின்கீழ், தொல்லியல் துறை வாயிலாக, தற்போது ஐந்து ரதங்கள், கடற்கரை கோவில், வெண்ணெய் உருண்டை பாறை ஆகிய பகுதிகளில், பிளாஸ்டிக் பாட்டில்களை துாளாக்கும் இயந்திரத்தை நிறுவியுள்ளனர்.