/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி நரியூரில் படையெடுக்கும் ஜந்துக்கள் சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி நரியூரில் படையெடுக்கும் ஜந்துக்கள்
சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி நரியூரில் படையெடுக்கும் ஜந்துக்கள்
சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி நரியூரில் படையெடுக்கும் ஜந்துக்கள்
சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி நரியூரில் படையெடுக்கும் ஜந்துக்கள்
ADDED : ஜூன் 18, 2024 11:49 PM

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே பச்சம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட நரியூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி செயல்படுகிறது. இதில், 25 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
மேலும், அதே வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இங்கு, 10 குழந்தைகள் உள்ளனர்.
ஒருங்கிணைந்த பள்ளி வளாகத்தின் முன் பக்கத்திற்கு மட்டும், 2022ம் ஆண்டு, ஊராட்சி நிதியில் இருந்து 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.
பள்ளி வளாகத்தின் பின் புறத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்படாததாலும், வயல்வெளிப் பகுதியில் பள்ளி உள்ளதாலும், கால்நடைகள், பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் நடமாட்டம் பள்ளி வளாகத்தில் நடமாடுவதாக கூறப்படுகிறது.
அவ்வப்போது, பள்ளி நேரங்களில் விஷஜந்துக்கள் வகுப்பறைக்குள் நுழைவதாக, மாணவ - மாணவியர் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பள்ளி வளாகத்தின் பின்புறத்தில் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.