/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஆத்துாரில் பூட்டை உடைத்து நகை, ரூ.25,000 கொள்ளை ஆத்துாரில் பூட்டை உடைத்து நகை, ரூ.25,000 கொள்ளை
ஆத்துாரில் பூட்டை உடைத்து நகை, ரூ.25,000 கொள்ளை
ஆத்துாரில் பூட்டை உடைத்து நகை, ரூ.25,000 கொள்ளை
ஆத்துாரில் பூட்டை உடைத்து நகை, ரூ.25,000 கொள்ளை
ADDED : ஜூன் 19, 2024 12:15 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் என்பவர் மனைவி உஷாராணி, 37. நேற்று முன்தினம் இரவு, குடும்பத்தினருடன் படுக்கை அறையில் துாங்கிக் கொண்டிருந்தனர்.
காலை எழுந்து பார்த்த போது, வீட்டின் முன் பக்க கதவை உடைத்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த நான்கு கிராம் தங்க நகை, 100 கிராம் வெள்ளி கொலுசு, 25,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர்.
காலையில் எழுந்து பார்த்த உஷாராணி, பீரோ உடைக்கப்பட்டு திருட்டு நடந்ததை அறிந்து, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், ஆத்துார் கிராமத்தை சேர்ந்த சந்திரன் மனைவி புனிதா, 50, நேற்று அதிகாலை 4:10 மணிக்கு, வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டு இருந்த போது, அந்த வழியாக வந்த மர்ம நபர், புனிதா கழுத்தில் அணிந்திருந்த 2.5 சவரன் தங்க செயினை பறித்து தப்பினார்.
இது குறித்த புகாரின்படி, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.