/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பெட்டிக்கடையில் பெட்ரோல் விற்றவர் மீது வழக்கு பதிவு பெட்டிக்கடையில் பெட்ரோல் விற்றவர் மீது வழக்கு பதிவு
பெட்டிக்கடையில் பெட்ரோல் விற்றவர் மீது வழக்கு பதிவு
பெட்டிக்கடையில் பெட்ரோல் விற்றவர் மீது வழக்கு பதிவு
பெட்டிக்கடையில் பெட்ரோல் விற்றவர் மீது வழக்கு பதிவு
ADDED : ஜூன் 19, 2024 12:16 AM
திருப்போரூர்:மானாமதி கிராமத்தில், அனுமதியின்றி பெட்டிக்கடையில் பெட்ரோல் விற்பனை செய்தவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருப்போரூரை அடுத்த மானாமதி கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெட்டிக்கடை, வீடுகளில், அரசு அனுமதியின்றி பெட்ரோல் விற்பனை செய்வதாக, நேற்று மானாமதி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.அதன்படி போலீசார், மானாமதி சுற்றியுள்ள கடை மற்றும் வீடுகளில் சோதனை செய்தனர். அப்போது, மானாமதி பஜார் வீதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில், 5 லிட்டர் பெட்ரோல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அக்கடை நடத்தி வந்த நித்தியானந்தம், 56, என்பவர் மீது வழக்கு பதிவு செய்து, 5 லிட்டர் பெட்ரோலை பறிமுதல் செய்தனர்.