/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அனுமந்தபுரம் காப்புக்காடுகளில் எச்சரிக்கை பலகைகள் அமைப்பு அனுமந்தபுரம் காப்புக்காடுகளில் எச்சரிக்கை பலகைகள் அமைப்பு
அனுமந்தபுரம் காப்புக்காடுகளில் எச்சரிக்கை பலகைகள் அமைப்பு
அனுமந்தபுரம் காப்புக்காடுகளில் எச்சரிக்கை பலகைகள் அமைப்பு
அனுமந்தபுரம் காப்புக்காடுகளில் எச்சரிக்கை பலகைகள் அமைப்பு
ADDED : ஜூன் 07, 2024 12:29 AM
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் -- அனுமந்தபுரம் சாலை 9 கி. மீ., தொலைவு உடையது. இந்த சாலை, திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலை.
இந்த சாலையை, தென்மேல்பாக்கம், அஞ்சூர், கொண்டமங்கலம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையில், கொண்டமங்கலம், தென்மேல்பாக்கம், சிறுங்குன்றம், தர்காஸ் உள்ளிட்ட பகுதிகளில், இருபுறமும் காப்புக்காடுகள் உள்ளன.
இந்த பகுதிகளில், இரவு நேரங்களில், சாலைஓரங்களில் பிளாஸ்டிக் குப்பை, பாட்டில்கள், பழைய மின்விளக்குகள், இறைச்சிக் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வந்தன.
மேலும், காடுகளுக்கு உள்ளே சென்று மது அருந்துவோர் மது பாட்டில்களை வீசி விட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக, இந்த காடுகளில் உள்ள குரங்குகள், கீரிப்பிள்ளை உள்ளிட்ட விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுவந்தது.
இதுகுறித்து, நம் நாளிதழில் சமீபத்தில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதனையடுத்து, வனத்துறை அதிகாரிகள் தென்மேல்பாக்கம் பகுதியில் உள்ள காப்புக் காட்டில் எச்சரிக்கை பலகைகள் வைத்துள்ளனர்.
அதில், இந்த பகுதியில் குப்பை கொட்டவோர், கழிவுநீர் ஊற்றுவோர் மற்றும் அத்துமீறுவோர் வனச்சட்டங்கள் கீழ்தண்டிக்கப்படுவர் எனவும்எழுதப்பட்டு உள்ளது.
மேலும், வனப்பகுதியில் வாகனங்கள் செல்ல ஏற்படுத்தப்பட்டு இருந்த தற்காலிக பாதைகளில், பொக்லைன் இயந்திரம்வாயிலாக பள்ளம் தோண்டி பாதைகள்தடுக்கப்பட்டுள்ளன.