/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பாரேரி கழிவுநீர் கால்வாய்க்கு மூடி அமைக்க வலியுறுத்தல் பாரேரி கழிவுநீர் கால்வாய்க்கு மூடி அமைக்க வலியுறுத்தல்
பாரேரி கழிவுநீர் கால்வாய்க்கு மூடி அமைக்க வலியுறுத்தல்
பாரேரி கழிவுநீர் கால்வாய்க்கு மூடி அமைக்க வலியுறுத்தல்
பாரேரி கழிவுநீர் கால்வாய்க்கு மூடி அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 20, 2024 12:19 AM

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சி, பாரேரி பகுதியில், 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு, பாரேரி -- பராசக்தி நகர் செல்லும் சாலை ஓரம், 300 மீட்டர் துாரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாய், முழுதும் திறந்த நிலையிலும் உரிய பராமரிப்பு இன்றியும் உள்ளது.
இதில், பிளாஸ்டிக் குப்பை தேங்கி, கழிவுநீர் செல்வதில் தடை ஏற்பட்டதால், கொசுத்தொல்லை அதிகரித்து, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
இந்த கழிவுநீர் கால்வாய், இங்குள்ள சாலையை விட சற்று உயரம் குறைவாக, திறந்த நிலையில் உள்ளது. சாலை வளைவுகளில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள், அடிக்கடி கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.
தெருக்களில் விளையாடும் குழந்தைகளும், இதில் தவறி விழும் அபாயம் உள்ளது. மேலும், கால்வாயில் பல இடங்களில் மணல் திட்டுகள் நிறைந்துள்ளதால், கழிவுநீர் செல்வதில் தடை ஏற்படுகிறது.
எனவே, இந்த கால்வாய் முழுதையும் முறையாக சுத்தம் செய்து, மேல் பகுதியில் கான்கிரீட் மூடிகள் அமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.