/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ உர மேலாண்மை குறித்து செங்கையில் ஆலோசனை கூட்டம் உர மேலாண்மை குறித்து செங்கையில் ஆலோசனை கூட்டம்
உர மேலாண்மை குறித்து செங்கையில் ஆலோசனை கூட்டம்
உர மேலாண்மை குறித்து செங்கையில் ஆலோசனை கூட்டம்
உர மேலாண்மை குறித்து செங்கையில் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூன் 20, 2024 12:22 AM

சித்தாமூர்:சித்தாமூர் ஒன்றியம், பூரியம்பாக்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், அட்மா திட்டத்தில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை வாயிலாக, ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், நேற்று நடந்தது.
இதில், சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு வேளாண் துணை இயக்குனர் செல்வபாண்டியன் பங்கேற்று, உயிர் உரங்கள் மற்றும் சீரான உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்வது குறித்து ஆலோசனை வழங்கினார்.
வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை உயர்த்துவது குறித்தும், இயற்கை மற்றும் உயிர் உரங்களை பயிருக்கு தேவையான அளவில் பயன்படுத்தி மண் வளத்தை பராமரிப்பது குறித்தும், மண் அறிவியல் துறை தொழில்நுட்ப வல்லுனர் ரவிசங்கர், விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெகதீசன், உழவன் செயலியை பதிவிறக்கம் செய்தல் மற்றும் திட்டங்களை முன்பதிவு செய்யும் விபரங்கள் குறித்து தெரிவித்தார்.