/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சாலையில் திரிந்த மாடுகள் பிடிப்பு கூடுவாஞ்சேரி நகராட்சி நடவடிக்கை சாலையில் திரிந்த மாடுகள் பிடிப்பு கூடுவாஞ்சேரி நகராட்சி நடவடிக்கை
சாலையில் திரிந்த மாடுகள் பிடிப்பு கூடுவாஞ்சேரி நகராட்சி நடவடிக்கை
சாலையில் திரிந்த மாடுகள் பிடிப்பு கூடுவாஞ்சேரி நகராட்சி நடவடிக்கை
சாலையில் திரிந்த மாடுகள் பிடிப்பு கூடுவாஞ்சேரி நகராட்சி நடவடிக்கை
ADDED : ஜூலை 16, 2024 04:30 AM

கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., மற்றும் நெல்லிக்குப்பம் பிரதான சாலைகளில், தொடர்ந்து மாடுகள் உலா வந்ததால், சாலை விபத்துகள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
தொடர்ந்து, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவின்படியும், நகராட்சி தலைவர் கார்த்திக், கமிஷனர் தாமோதரன் ஆகியோர் ஆலோசனையின்படியும், மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்க தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் தலைமையிலான நகராட்சி பணியாளர்கள், நெல்லிக்குப்பம் சாலை, ஜி.எஸ்.டி., சாலை பகுதிகளில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகளை, நேற்று பிடித்தனர்.
நேற்று மட்டும், சாலையில் சுற்றித் திரிந்த 16 மாடுகள் பிடிக்கப்பட்டு, சமுதாய நலக்கூடத்தில் அடைத்து பாதுகாக்கப்பட்டன.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் தாமோதரன் கூறியதாவது:
சாலைகளில் உலா வரும் மாடுகளால், தொடர்ந்து விபத்துகள் ஏற்படுகின்றன. இது தொடர்பாக, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
கலெக்டரின் உத்தரவுப்படி, சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து, பட்டியில் அடைக்கப்பட்டன.
மேலும், மாட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஒவ்வொரு மாட்டிற்கும், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராத தொகையை செலுத்தி, மாடுகளை மீட்டுச் செல்ல வேண்டும். தவறும்பட்சத்தில், பொது ஏலம் விடப்படும்.
மேலும், தொடர்ந்து சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு, கோ சாலைகளுக்கு நிரந்தரமாக அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.