/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை
அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை
அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை
அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை
ADDED : ஜூன் 06, 2024 10:42 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில், மூன்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாடு முழுதும் உள்ள மருத்துவ கல்லுாரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு, கடந்த மே மாதம் 5ம் தேதி நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், நீட் தேர்வு நடந்த ஆறு மையங்களில், 3,155 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதில், 99 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. அதன்பின், நீட் தேர்வு முடிவு, கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டது.
செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில், 72 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து, 444 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்.
இதில், கடப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிவி சைந்தவி 609 மதிப்பெண்களும், குரோம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி நிவேதா 521 மதிப்பெண்களும் பெற்றனர்.
அதேபோல், சூணாம்பேடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் சண்முகப்பிரியன், 502 மதிப்பெண் பெற்றுள்ளார்.
தேர்வில், 116 பேர் தகுதி மதிப்பெண் பெற்றுள்ளனர். 600க்கும் மேல் ஒரு மாணவியும், 500க்கும் மேல் இருவரும், 400க்கும் மேல் நான்கு பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டில் தகுதி பெற்றவர்கள் 72 பேர் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.