/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ நாட்டுப்புற கலை பயிற்சி 44 பேர் சேர்க்கை நாட்டுப்புற கலை பயிற்சி 44 பேர் சேர்க்கை
நாட்டுப்புற கலை பயிற்சி 44 பேர் சேர்க்கை
நாட்டுப்புற கலை பயிற்சி 44 பேர் சேர்க்கை
நாட்டுப்புற கலை பயிற்சி 44 பேர் சேர்க்கை
ADDED : ஜூலை 15, 2024 05:45 AM
மாமல்லபுரம் : தமிழக பண்டைய நாட்டுப்புற கலைகளாக கரகம், சிலம்பாட்டம், நையாண்டி மேளம், கும்மி, தெருக்கூத்து நாடகம் உள்ளிட்டவை புகழ்பெற்றவை. தற்கால வாழ்க்கைச் சூழலில், இத்தகைய கலைகள் அரிதாகி வருகின்றன.
அவற்றை பாதுகாக்கவும், வருங்கால தலைமுறையினர் அறியவும், தமிழக கலை பண்பாட்டுத்துறை முடிவெடுத்து, பயிற்சிஅளிக்க ஏற்பாடும் செய்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் இயங்கும் அரசு கட்டட, சிற்பக்கலை கல்லுாரியில், கிராமிய நடனம், சிலம்பாட்டம், நாடகம் மற்றும் தோள்பாவைக்கூத்து ஆகிய கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
மேலும், வெள்ளி, சனி ஆகிய நாட்களில், மாலை 4:00 - 6:00 மணி வரை என, ஓராண்டிற்கு பயிற்சி அளிக்கப்படும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 17 வயதிற்கு மேற்பட்டோருக்கு பயிற்சியளித்து, தேர்வு நடத்தி, சான்றிதழ் அளிக்கப்படும்.
சிலம்பாட்டத்தில் 32 பேர், கிராமிய நடனத்தில் 11 பேர், தோள்பாவைக்கூத்தில் ஒருவர் என, பயிற்சிக்கு சேர்ந்தனர். நாடகத்திற்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை. முதல்வர் ராமன், ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் ஆகியோர் நேற்று முன்தினம் பயிற்சியை துவக்கினர்.