/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செட்டிபுண்ணியத்தில் தீ தடுப்பு விழிப்புணர்வு செட்டிபுண்ணியத்தில் தீ தடுப்பு விழிப்புணர்வு
செட்டிபுண்ணியத்தில் தீ தடுப்பு விழிப்புணர்வு
செட்டிபுண்ணியத்தில் தீ தடுப்பு விழிப்புணர்வு
செட்டிபுண்ணியத்தில் தீ தடுப்பு விழிப்புணர்வு
ADDED : மார் 13, 2025 10:26 PM
மறைமலைநகர்:மகேந்திரா சிட்டி தீயணைப்பு நிலையம் சார்பில், கோடை காலம் துவங்குவதை முன்னிட்டு, தீ விபத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தடுப்பு முறை குறித்து, செட்டிபுண்ணியம் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராகவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்கு தீ அணைப்பானை பயன்படுத்துவது, அவசர காலங்களில் சமயோசிதமாக செயல்படுவது குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.