Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பாம்பு கடித்த 503 பேருக்கு செங்கை மருத்துவமனை... மறுவாழ்வு :விழிப்புணர்வு இல்லாததால் ஓராண்டில் 33 பேர் இறப்பு

பாம்பு கடித்த 503 பேருக்கு செங்கை மருத்துவமனை... மறுவாழ்வு :விழிப்புணர்வு இல்லாததால் ஓராண்டில் 33 பேர் இறப்பு

பாம்பு கடித்த 503 பேருக்கு செங்கை மருத்துவமனை... மறுவாழ்வு :விழிப்புணர்வு இல்லாததால் ஓராண்டில் 33 பேர் இறப்பு

பாம்பு கடித்த 503 பேருக்கு செங்கை மருத்துவமனை... மறுவாழ்வு :விழிப்புணர்வு இல்லாததால் ஓராண்டில் 33 பேர் இறப்பு

ADDED : மார் 13, 2025 10:27 PM


Google News
Latest Tamil News
மறைமலைநகர்:செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கடந்தாண்டு பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு, 536 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில், 503 பேர் நலமுடன் வீடு திரும்பி உள்ளனர்; 33 பேர் உயிரிழந்து உள்ளனர்.

செங்கல்பட்டு நகராட்சியில், பழைய ஜி.எஸ்.டி., சாலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளது.

இங்கு, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

இங்கு தினமும் புற நோயாளிகளாக, 3,000க்கும் மேற்பட்டவர்களும், உள்நோயாளிகளாக 1,700க்கும் மேற்பட்டவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், காப்புக் காடுகள், மலை மற்றும் வயல்வெளி நிறைந்த பகுதி என்பதால், பாம்புகள் அதிக அளவில் உள்ளன.

குறிப்பாக நல்லப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன் உள்ளிட்ட அதிக விஷத் தன்மை கொண்ட பாம்புகள் அதிகமாக உள்ளன.

இந்த வகை பாம்புகள் கடித்தால் நரம்பு மண்டலம் பாதிப்பு, ரத்தம் உறைதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதற்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பாம்பு கடிக்கு என, தனியாக நச்சு நீக்கி சிகிச்சை பிரிவு துவங்கி, செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்தாண்டு பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு, 536 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 503 பேர் நலமுடன் வீடு திரும்பி உள்ளனர்; 33 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது:

வயல்களுக்கு ஆடு, மாடு மேய்ச்சலுக்கு கால்நடைகளை அழைத்துச் செலுவோர் மற்றும் காவலுக்குச் செல்வோர் அதிகமாக பாம்பு கடியால் பாதிக்கப்படுகின்றனர்.

இவர்களுக்கு, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது. பின், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை நச்சு நீக்கி பிரிவில் சேர்த்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவ்வாறு சிகிச்சை அளித்ததில், கடந்த 2024ம் ஆண்டு பாம்பு கடித்து அனுமதிக்கப்பட்ட 536 நபர்களில், 171 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 503 பேர் சிகிச்சை பெற்று, நலமுடன் வீடு திரும்பினர். 33 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். உயிரிழப்பிற்கு முக்கிய காரணம், பாம்பு கடி குறித்த விழிப்புணர்வு இல்லாதது தான்.

பாம்பு கடித்தவுடன், எந்தவித பதற்றமும், பயமும் இல்லாமல், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அலட்சியம் காட்டுவதால், உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு, நிர்வாகம் கூறியுள்ளது.

வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த போது, கத்தரி என்ற வகையான பாம்பு கடித்தது. இதையடுத்து, 40 நாட்களுக்கும் மேலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தேன்.

சிகிச்சைக்குப் பின், தற்போது நலமுடன் உள்ளேன்.

- -அருண்,33,

விவசாயி, மதுராந்தகம்.

உயிரிழப்பிற்கு முக்கிய காரணம், பாம்பு கடி குறித்த விழிப்புணர்வு இல்லாதது தான்.

பாம்பு கடித்தவுடன், எந்தவித பதற்றமும், பயமும் இல்லாமல், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அலட்சியம் காட்டுவதால், உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us