/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ போரூரில் சாலை வசதி ஏற்படுத்த வலியுறுத்தல் போரூரில் சாலை வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
போரூரில் சாலை வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
போரூரில் சாலை வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
போரூரில் சாலை வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஜூலை 16, 2024 05:04 AM

சித்தாமூர் : சித்தாமூர் அருகே உள்ள போரூர் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஊராட்சிக்கு உட்பட்ட துலுக்காணத்தம்மன் கோவில் தெருவில், பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல், அப்பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சாலை வசதி இல்லாததால், மழைக்காலங்களில் அப்பகுதி தெருக்களில் தண்ணீர் தேங்குவதாலும், சகதியாக மாறுவதாலும், நடந்து செல்லவும், இருசக்கர வாகனத்தில் செல்லவும் அப்பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர்.
மேலும், இப்பகுதியில் அரசு ஆரம்பப்பள்ளி உள்ளதால், பள்ளி செல்லும் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.