/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வேதகிரீஸ்வரர் கோவிலில் ரூ.11 லட்சம் காணிக்கை வேதகிரீஸ்வரர் கோவிலில் ரூ.11 லட்சம் காணிக்கை
வேதகிரீஸ்வரர் கோவிலில் ரூ.11 லட்சம் காணிக்கை
வேதகிரீஸ்வரர் கோவிலில் ரூ.11 லட்சம் காணிக்கை
வேதகிரீஸ்வரர் கோவிலில் ரூ.11 லட்சம் காணிக்கை
ADDED : ஜூலை 20, 2024 05:55 AM
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் உண்டியல்களில், பக்தர்கள் 10.67 லட்சம் ரூபாய், தங்கம், வெள்ளி ஆபரணங்கள் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
திருக்கழுக்குன்றத்தில் பிரசித்திபெற்ற வேதகிரீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு, ஆடிப்பூரம் உற்சவம், வரும் 28ம் தேதி துவங்கி, 10 நாட்கள் நடக்கிறது.
இந்நிலையில், கோவில் உண்டியல்களில், ஏப்., 11ம் தேதி முதல் நேற்று வரை பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள், நேற்று கணக்கிடப்பட்டன.
பொறுப்பு உதவி ஆணையர் ஹரிஹரன், ஆய்வாளர் பாஸ்கரன், செயல் அலுவலர்புவியரசு ஆகியோர் மேற்பார்வையில், உண்டியல்கள் திறக்கப்பட்டன.
அதன்பின், கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:
கோவிலில் உள்ள 10 பொது உண்டியல்களில், 8 லட்சத்து 46 ஆயிரத்து 818 ரூபாய் காணிக்கையாக வந்துள்ளது. அதேபோல், இரண்டு திருப்பணி உண்டியல்களில், 2 லட்சத்து 20 ஆயிரத்து 785 ரூபாய் காணிக்கை வந்துள்ளது.
அதோடு, 28 கிராம் தங்கம், 245 கிராம் வெள்ளி ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.