/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ நவீன கருவி பொருத்திய ஹெல்மெட் மின் ஊழியர்களுக்கு வினியோகம் நவீன கருவி பொருத்திய ஹெல்மெட் மின் ஊழியர்களுக்கு வினியோகம்
நவீன கருவி பொருத்திய ஹெல்மெட் மின் ஊழியர்களுக்கு வினியோகம்
நவீன கருவி பொருத்திய ஹெல்மெட் மின் ஊழியர்களுக்கு வினியோகம்
நவீன கருவி பொருத்திய ஹெல்மெட் மின் ஊழியர்களுக்கு வினியோகம்
ADDED : ஜூன் 10, 2024 11:16 PM
பல்லாவரம் : பல்லாவரம் சரகத்தில், மின் கம்பங்களில் ஏறி பணிபுரியும் மின் ஊழியர்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க,'வோல்டேஜ் சென்சார் டிடெக்டர்' கருவி பொருத்தப்பட்ட ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது.
மின் வாரியம் சார்பில் மழை, காற்று, புயல் மற்றும்இயற்கை பேரிடர் காலத்தில், எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் மின் தடை விரைந்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 'கேங்மேன்'கள் எந்த நேரமாக இருந்தாலும், மின் கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்கின்றனர்.
இதுபோன்ற நேரங்களில், எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. உயிரிழப்புகளை தவிர்க்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கம்பத்தில் ஏறும் போது, வடத்தில் மின்சாரம் இருப்பதை கண்டறிய,'வோல்டேஜ் சென்சார் டிடெக்டர்' என்ற புதிய கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மின்காந்த அலை மற்றும் 'சென்சார்' மூலம் இக்கருவி செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
கம்பத்தில் ஏறும் ஊழியர்கள், தங்களது தலையில் அணிந்துள்ள ஹெல்மெட் அல்லது கையில் இந்த கருவியை பொருத்திக் கொள்ள வேண்டும்.
கம்பத்தின் உயரத்திற்கு செல்லும் போது, 3 அடி துாரத்தில் மின் ஓட்டம் இருப்பது, கருவியில் உள்ள சென்சார் மூலம் தெரிந்து விடும்.
உடனே எச்சரிக்கை ஒலி எழுப்பும். அப்போது, ஊழியர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, விபத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
இக்கருவி பொருத்திய ஹெல்மெட்டை, பல்லாவரம் மின் கோட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, கோட்ட செயற்பொறியாளர் பாரிராஜ், நேற்று வழங்கினார்.