/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தாம்பரம் யார்டு மேம்பாடு; கூடுதல் ரயில்கள் இயக்க வசதி தாம்பரம் யார்டு மேம்பாடு; கூடுதல் ரயில்கள் இயக்க வசதி
தாம்பரம் யார்டு மேம்பாடு; கூடுதல் ரயில்கள் இயக்க வசதி
தாம்பரம் யார்டு மேம்பாடு; கூடுதல் ரயில்கள் இயக்க வசதி
தாம்பரம் யார்டு மேம்பாடு; கூடுதல் ரயில்கள் இயக்க வசதி
ADDED : ஜூன் 04, 2024 05:29 AM
சென்னை : தாம்பரம் நிலையத்தில் உள்ள ரயில்வே யார்டில், 10 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. இதனால், கூடுதல் ரயில்களை இயக்க முடியும் என, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிற மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், போக்குவரத்து தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஏற்கனவே ரயில்களை இயக்கி வரும் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் முனையங்களில் இடநெருக்கடி ஏற்படுகிறது.
இதனால், தாம்பரத்தில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்பட்டு, 2018ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. புறநகரில் முக்கிய ரயில் நிலையமாக இருப்பதால், இங்கு வந்து செல்லும் தினசரி பயணியரின் எண்ணிக்கை 2.30 லட்சத்தை தாண்டியுள்ளது.
இருப்பினும், பயணியருக்கான அடிப்படை வசதிகள் போதிய அளவில் மேம்படுத்தவில்லை என, பயணியர் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.
இதையடுத்து, கூடுதல் ரயில்களை இயக்க, தாம்பரம் ரயில்வே யார்டில் மேம்பாட்டு பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன.
சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் ரயில்களுக்கு, எழும்பூரை அடுத்து தாம்பரம் முக்கிய நிலையமாக இருக்கிறது.
பயணியரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தாம்பரம் ரயில் முனையத்தில், நடைமேடை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுபோல், கூடுதல் ரயில்களை இயக்க, இங்குள்ள யார்டுகள் 10 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட உள்ளன.
நவீன கருவிகள், கூடுதல் நடைமேடைகள், யார்டு விரிவாக்கப் பணிகள் விரைவில் துவக்கப்படும். இதனால், ரயில்கள் தாமதத்தை குறைக்க முடியும். அதுபோல், விரைவு மற்றும் கூடுதல் மின்சார ரயில்களை இயக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.