/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கார் - டூ வீலர் மோதல் துாக்கி வீசப்பட்ட நபர் பலி கார் - டூ வீலர் மோதல் துாக்கி வீசப்பட்ட நபர் பலி
கார் - டூ வீலர் மோதல் துாக்கி வீசப்பட்ட நபர் பலி
கார் - டூ வீலர் மோதல் துாக்கி வீசப்பட்ட நபர் பலி
கார் - டூ வீலர் மோதல் துாக்கி வீசப்பட்ட நபர் பலி
ADDED : ஜூன் 05, 2024 01:43 AM
மதுராந்தகம்:செய்யூர் அருகே உள்ள இரண்யசித்தி பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார், 30. அவர், ஸ்விப்ட் காரில் மதுராந்தகம் அடுத்த மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் மீது, அதிவேகமாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் நிறுவன பணியாளர்களை ஏற்றி சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்றார்.
எதிர் திசையில், மதுராந்தகம் அடுத்த வில்வராயநல்லுார் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், 58, முதுகரை பகுதியைச் சேர்ந்த சுமன், 26, ஆகியோர் டி.வி.எஸ்., ஸ்கூட்டி வாகனத்தில், மதுராந்தகம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அச்சமயத்தில், பேருந்தை முந்திச் செல்ல முயன்ற ஸ்விப்ட் கார், எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது, அதிவேகமாக மோதியது.
இதில், இருசக்கர வாகனத்தில் இருந்து துாக்கி வீசப்பட்ட ஆறுமுகம், 30 அடி உயரமான மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சுமன், பலத்த காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து, சக வாகன ஓட்டிகள் அளித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு சென்ற மதுராந்தகம் போலீசார், வழக்கு பதிவு செய்து, கார் ஓட்டிவந்த அஜித்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.