Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தேர்தல் முடிந்தும் கூட்டம் நடத்தவில்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

தேர்தல் முடிந்தும் கூட்டம் நடத்தவில்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

தேர்தல் முடிந்தும் கூட்டம் நடத்தவில்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

தேர்தல் முடிந்தும் கூட்டம் நடத்தவில்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

ADDED : ஜூலை 04, 2024 10:25 PM


Google News
தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சி கூட்டம், 2024, பிப்., 29ம் தேதி நடந்தது. அதன்பின், லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதால், மாநகராட்சி கூட்டத்தை நடத்த முடியவில்லை.

இந்த நிலையில், தேர்தல் முடிந்தும், இதுவரை கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால், ஐந்து மண்டலங்களிலும், சாலை, குடிநீர் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து, கவுன்சிலர்கள் கூறியதாவது:

தேர்தல் முடிந்த பின், சென்னை மாநகராட்சியில் கூட்டம் நடத்தி முடித்துள்ளனர். ஆனால், தாம்பரம் மாநகராட்சியில் இதுவரை கூட்டம் நடத்தப்படவில்லை. இங்குள்ள மேயர், மக்கள் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காததே இதற்கு காரணம்.

கூட்டம் நடத்தினால் தான், பல பணிகளுக்கு நிர்வாக அனுமதிக்கான தீர்மானம் கொண்டுவரப்படும். இதற்கு முன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கான பணி உத்தரவு, இறுதி தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும், புதிய பணிகளும் இடம் பெறும்.

வார்டுகளில் உள்ள குறைகளை, மேயர், துணை மேயர், கமிஷனர் முன் எடுத்து கூறி, அதை சரிசெய்ய நடவடிக்கை முயற்சி எடுக்கப்படும். ஆனால், கூட்டமே நடத்தாமல் இருந்தால், எங்களது குறைகளை எப்படி தெரிவிக்க முடியும்.

ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு, 'டெண்டர்' வைத்தால் தானே பணிகளை துவக்க முடியும். எந்த வேலையும் முறையாக நடக்கவில்லை.

தற்போது, கூட்டம் நடத்தாமல் இருப்பதால், அடிப்படை பணிகளையும் செயல்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால், மாதம் மாதம், மாநகராட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள்கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us