ADDED : ஜூலை 04, 2024 10:24 PM
தாம்பரம்:ஒரு முறை பயன்படுத்தப்படும், 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ய, தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், இந்த உத்தரவை மீறி, பல இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுகின்றன.
தாம்பரம் மாநகராட்சி பம்மல், பல்லாவரம், செம்பாக்கம், பெருங்களத்துார் மற்றும் கிழக்கு தாம்பரம் ஆகிய மண்டலங்களில், நேற்று முன்தினம், மாநகராட்சி அலுவலர்களால் கள ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், 280 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, பல கடைகளுக்கு 1.17 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுஉள்ளது.