Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கேளம்பாக்கம் கூட்டு குடிநீர் திட்டம் கைவிடக்கோரி ஆலோசனை கூட்டம்

கேளம்பாக்கம் கூட்டு குடிநீர் திட்டம் கைவிடக்கோரி ஆலோசனை கூட்டம்

கேளம்பாக்கம் கூட்டு குடிநீர் திட்டம் கைவிடக்கோரி ஆலோசனை கூட்டம்

கேளம்பாக்கம் கூட்டு குடிநீர் திட்டம் கைவிடக்கோரி ஆலோசனை கூட்டம்

ADDED : ஜூலை 09, 2024 11:19 PM


Google News
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், கோவளம் பகுதிக்கு, 25 ஆண்டுகளாக தையூர் ஊராட்சியில் இருந்து, இரண்டு கிணறுகள் வாயிலாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், கடந்தாண்டு 'ஜல் ஜீவன் மிஷன்' கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக, தையூர் பகுதியில் மீண்டும் இரு கிணறுகள் தோண்டி, அங்கிருந்து கோவளம் பகுதிக்கு குடிநீர் வழங்க பணிகள் துவக்கப்பட்டன.

இதற்கு, தையூர் பகுதிவாசிகள் ஏரியை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பை அடுத்து, கிணறு தோண்டும் பணி கைவிடப்பட்டது.

பின், கேளம்பாக்கம் ஊராட்சியில் உள்ள வண்ணான் ஏரியில், இத்திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்து, ஏரியில் இயந்திரங்கள் வாயிலாக மண் மற்றும் நீர் பரிசோதனை பணி மேற்கொண்டனர். இதற்கும் அப்பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், கேளம்பாக்கம் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, கடந்த ஜூன் 26ம் தேதி, சப் - கலெக்டர் நாராயணசர்மா தலைமையில், அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால், சில நிர்வாக காரணங்களால், அந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

பின், கடந்த 2ம் தேதி கூட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி கூட்டம் நடந்தது. இதில், கேளம்பாக்கம் ஊராட்சி சார்ந்த பொதுமக்கள் குறைவாக பங்கெடுத்ததால், மீண்டும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து, வரும் 13ம் தேதி மாலை 3:00 மணிக்கு, திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கூட்டத்தை நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கேளம்பாக்கம் ஊராட்சி சார்ந்த மக்கள் சார்பில், இத்திட்டம் சம்பந்தமாக கலந்தாலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது.

இதில், ஊராட்சியைச் சார்ந்த கிராம மக்கள் பங்கேற்று, தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக, இத்திட்டத்தை கைவிடக் கோரி ஆலோசிக்கப்பட்டது.

அதோடு, இந்த ஊராட்சியில், வரும் 11ம் தேதி நடைபெறும் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் அமைச்சர், கலெக்டரிடம் மனு அளிப்பது குறித்தும், மேலும் 13ம் தேதி நடைபெறும் அமைதி கூட்டத்தில் பங்கேற்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us