/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கையில் மயங்கி விழுந்து கல்லூரி மாணவி உயிரிழப்பு செங்கையில் மயங்கி விழுந்து கல்லூரி மாணவி உயிரிழப்பு
செங்கையில் மயங்கி விழுந்து கல்லூரி மாணவி உயிரிழப்பு
செங்கையில் மயங்கி விழுந்து கல்லூரி மாணவி உயிரிழப்பு
செங்கையில் மயங்கி விழுந்து கல்லூரி மாணவி உயிரிழப்பு
ADDED : ஜூலை 10, 2024 10:37 PM
மதுராந்தகம்,:படாளம் அடுத்த குமாரவாடி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் மகள் ஜெயஸ்ரீ, 21; கல்லூரி மாணவி. கடந்த வாரம் செங்கல்பட்டில் உள்ள தனியார் டைப் ரைட்டிங் வகுப்பில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
நேற்று முன்தினம் பயிற்சி வகுப்பு முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். பின், தனக்கு மயக்கமாக இருப்பதாக தாயிடம் கூறினார். சிறிது நேரம் தூங்கினால் சரியாகி விடும் என, அவரது தாய் கூறியதின் படி, சிறிது தூங்கியுள்ளார்.
பின், ஜெயஸ்ரீயின் தாய் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, ஜெயஸ்ரீ சுயநினைவு இழந்து மயக்க நிலையில் இருந்துள்ளார். உடனே, செங்கல்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து நேற்று, மருத்துவமனை சார்பில் அளிக்கப்பட்ட தகவலின்படி, படாளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.