/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ காவலரை தாக்கிய ஓட்டுனர் மீது வழக்கு காவலரை தாக்கிய ஓட்டுனர் மீது வழக்கு
காவலரை தாக்கிய ஓட்டுனர் மீது வழக்கு
காவலரை தாக்கிய ஓட்டுனர் மீது வழக்கு
காவலரை தாக்கிய ஓட்டுனர் மீது வழக்கு
ADDED : ஜூலை 10, 2024 10:36 PM
செங்கல்பட்டு:காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த மருதம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார், 41. இவர், 2008 முதல்காவல் துறையில் பணிபுரிந்து வருகிறார்.
தற்போது, செங்கல்பட்டு மதுவிலக்கு அமலாக்க பிரிவில் காவலராக பணியில் உள்ளார். செங்கல்பட்டில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை விபத்து வழக்கு தொடர்பாக, செங்கல்பட்டு நீதிமன்றம் சென்று மீண்டும் மாலை காவலர் குடியிருப்புக்கு இருசக்கர வாகனத்தில் அருண்குமார் சென்று கொண்டிருந்தார்.
செங்கல்பட்டு மேட்டு தெரு விநாயகர் கோவில் அருகே, போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோ நிறுத்தப்பட்டு இருந்தது. இதுகுறித்து ஆட்டோவில் இருந்தவரிடம் கேட்ட போது, இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில், அந்த நபர் அருண்குமாரை தாக்கிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றார். இது குறித்து அருண்குமார் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில், அருண்குமாரை தாக்கியது, அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சலாவுதீன், 38, என தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.