/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மக்களுடன் முதல்வர் திட்டம் செங்கையில் இன்று துவக்கம் மக்களுடன் முதல்வர் திட்டம் செங்கையில் இன்று துவக்கம்
மக்களுடன் முதல்வர் திட்டம் செங்கையில் இன்று துவக்கம்
மக்களுடன் முதல்வர் திட்டம் செங்கையில் இன்று துவக்கம்
மக்களுடன் முதல்வர் திட்டம் செங்கையில் இன்று துவக்கம்
ADDED : ஜூலை 11, 2024 12:36 AM
செங்கல்பட்டு:ஊராட்சி பகுதிகளில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் இன்று துவங்கி, ஆக., 10ம் தேதி வரை நடக்கிறது.
இதுகுறித்துகலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப் போரூர், காட்டாங்கொளத்துார், புனித தோமையார்மலை ஆகிய ஊராட்சிஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிஒன்றியங்களில், முதற்கட்டமாக50 ஊராட்சிகளில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், இன்று துவங்கி, ஆக.,10ம் தேதி வரை நடக்கிறது.
இதில், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆறு முகாம்கள், சித்தாமூர், லத்துார் ஊராட்சிஒன்றியங்களில்,தலா ஐந்து முகாம்கள், மதுராந்தகம், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியங்களில்,தலா ஏழு முகாம்கள் நடக்கிறது.
மேலும், திருக் கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் எட்டு முகாம்கள், காட்டாங் கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், 11 முகாம்கள் என,50 முகாம்கள்நடக்கிறது.
இந்த முகாம்களில், அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளதால், பொதுமக்கள் தங்கள்பகுதியில் உள்ள குறைகளை மனுக் களாக அளித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.