/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கொளத்துார் ஊராட்சி பகுதியில் உடைந்து தொங்கும் 'சிசிடிவி'க்கள் கொளத்துார் ஊராட்சி பகுதியில் உடைந்து தொங்கும் 'சிசிடிவி'க்கள்
கொளத்துார் ஊராட்சி பகுதியில் உடைந்து தொங்கும் 'சிசிடிவி'க்கள்
கொளத்துார் ஊராட்சி பகுதியில் உடைந்து தொங்கும் 'சிசிடிவி'க்கள்
கொளத்துார் ஊராட்சி பகுதியில் உடைந்து தொங்கும் 'சிசிடிவி'க்கள்
ADDED : ஜூலை 19, 2024 12:13 AM
மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொளத்துார் ஊராட்சியில், கொளத்துார், வெண்பாக்கம் ஆகிய இரண்டு கிராமங்கள் உள்ளன. இங்கு 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த ஊராட்சியில், கடந்த 2022ம் ஆண்டு, தெள்ளிமேடு -- ரெட்டிப்பாளையம் சாலையில், கொளத்துார் சாலை சந்திப்பு மற்றும் வெண்பாக்கம் முருகன் கோவில் எதிரில், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, ஊராட்சி அலுவலகத்தில் கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்த கேமராக்கள் வாயிலாக, பாலுார் போலீசார் குற்றவாளிகளை கண்காணிக்க வசதியாக இருந்தது.
இந்நிலையில், கொளத்துார் சந்திப்பில் உள்ள கேமராக்கள் உடைந்து, தலை கவிழ்ந்து காணப்படுகிறது. இதனால், இந்த பகுதியில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்தகேமராக்களை பழுது நீக்கம் செய்து, மீண்டும் முறையாக பொருத்த வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.