Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

ADDED : ஜூன் 22, 2024 12:56 AM


Google News
Latest Tamil News
திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சி புதுத்தெருவை சேர்ந்தவர் அய்யப்பன், 34. இவர், தனியார் கார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

உடல் நலக்குறைவால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அய்யப்பன், நேற்று முன்தினம் 2:00 மணியளவில் மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய, சகோதரர் சரவணன், சகோதரி இன்பவள்ளி முன்வந்தனர்.

நேற்று, அய்யப்பனின் இரண்டு கண்கள், இரண்டு இதய வால்வுகள், இரண்டு சிறுநீரகங்கள், ஒரு கல்லீரல் ஆகிய, 7 உறுப்புகளை அறுவை சிகிச்சை வாயிலாக அகற்றப்பட்டு, அதே மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

அவரது உடலுக்கு, செங்கல்பட்டு சப் - கலெக்டர் நாராயண சர்மா, திருப்போரூர் தாசில்தார் வெங்கட்ரமணன் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us