/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஜூலை 17, 2024 09:55 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த தாழம்பூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை 3:00 மணிக்கு, இப்பள்ளிக்கு போலி மின்னஞ்சல் முகவரியிலிருந்து, மிரட்டல் கடிதம் வந்ததாக, அப்பள்ளி முதல்வர் தாழம்பூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் பள்ளிகளுக்கு விரைந்து சென்றனர். வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி முழுதும் சோதனை நடத்தி, வெடிகுண்டு ஏதும் இருக்கிறதா என்று தேடினர்.
ஆனால், இந்த சோதனையின்போது வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார், மின்னஞ்சல் எங்கிருந்து வந்துள்ளது என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.