Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 55 மின் ரயில்கள் சேவை ரத்து

55 மின் ரயில்கள் சேவை ரத்து

55 மின் ரயில்கள் சேவை ரத்து

55 மின் ரயில்கள் சேவை ரத்து

ADDED : ஜூலை 17, 2024 10:05 PM


Google News
தாம்பரம் யார்டில், வரும் 23 முதல், ஆக., 14 வரை மேம்பாட்டு பணிகள் நடக்க வுள்ளன. அதனால், சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு தடத்தில், அந்த காலகட்டத்தில், 55 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

செங்கை தடத்தில் 23 முதல் ஆக., 14 வரை ரத்து

தாம்பரம் யார்டு மேம்பாட்டு பணிக்கு நடவடிக்கை

சென்னை, ஜூலை 18-

சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தாம்பரம் ரயில்வே யார்டில், வரும் 23 முதல் ஆக., 14 வரை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், இந்த தடத்தில் 55 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

★ சென்னை கடற்கரை - செங்கல்பட்டு காலை 9:30, 9:56, 10:12, 10:56, 11:40, நண்பகல் 12:20, 12:40, இரவு 10:40 மணி ரயில்கள் ரத்து செய்யப்படும்

★ சென்னை கடற்கரை - தாம்பரம் காலை 9:40, 9:48, 10:04, 10:24, 10:30, 10:36, 10:46, 11:06, 11:14, 11:22, 11:30, 11:50, நண்பகல் 12:00, 12:10, 12:30, 12:50, இரவு 11:05, 11:30, 11:59 மணி ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

* சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி இரவு 7:19, இரவு 8:15, 8:45, 8:55, 9:40 மணி ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன

★ தாம்பரம் - கடற்கரைக்கு காலை 10:30, 10:40, 11:00, 11:10, 11:30, 11;40, நண்பகல் 12:05, 12:35, மதியம் 1:00. 1:30 இரவு 11:40 மணி ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன

* செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி காலை 10:00, காஞ்சிபுரம் - கடற்கரை காலை 9:30, திருமால்பூர் - கடற்கரை காலை 11:05 ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன

* செங்கல்பட்டு - கடற்கரை காலை 11:00, 11:30, நண்பகல் 12:00, இரவு 11:00 மணி ரயில்களும், கூடுவாஞ்சேரி - சென்னை கடற்கரை இரவு 8:55, 9:45, 10:10, 10:25, 11:20 மணி ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

சிறப்பு ரயில்கள்:

★ சென்னை கடற்கரை - பல்லாவரத்துக்கு காலை 9:30, 9:50, 10:10, 10:30, 10:50, 11:10, 11:30, 11:50, நண்பகல் 12:10, 12:30, 12:50, இரவு 10:40, 11:05, 11:30, 11:59 மணிக்கு பயணியர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்

★ பல்லாவரத்தில் இருந்து கடற்கரைக்கு காலை 10:20, 10:40, 11:00, 11:20, 11:40, நண்பகல் 12:00, 12:20, 12:40, மதியம் 1:00, 1:20, 1:40 மணிக்கும், இரவு 11:30, 11:55, 12:20 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்

★ கூடுவாஞ்சேரியில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 10:45, 11:10, நண்பகல் 12:00, 12:50, 1:35, 1:55, இரவு 11:55 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்

★ செங்கல்பட்டில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு காலை 10:00, 10:30, 11:00, 11:45, நண்பகல் 12:30, மதியம் 1:00, இரவு 11:00 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தாம்பரம் - ராமநாதபுரம்

சிறப்பு ரயில்கள்3 நாட்களுக்கு ரத்துதாம்பரம் ரயில்வே யார்டு பணிகளால், தென்மாவட்ட விரைவு ரயில்கள், மின்சார ரயில்களின் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன★ தாம்பரம் - ராமநாதபுரம் இரவு 7:00 மணி வாரந்திர ரயில், வரும் 26, 28ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது ★ ராமநாதபுரம் - தாம்பரம் மாலை 3:00 மணி வாரந்திர ரயில் வரும் 22, 27, 29ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us