/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சென்னையில் 3 பேரிடர் மீட்பு மையம் சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு சென்னையில் 3 பேரிடர் மீட்பு மையம் சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
சென்னையில் 3 பேரிடர் மீட்பு மையம் சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
சென்னையில் 3 பேரிடர் மீட்பு மையம் சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
சென்னையில் 3 பேரிடர் மீட்பு மையம் சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
ADDED : ஜூன் 25, 2024 06:12 AM
சென்னை : ''சென்னை மற்றும் புறநகரில், மூன்று இடங்களில், 36 கோடி ரூபாய் செலவில் பேரிடர் மீட்பு மையங்கள் அமைக்கப்படும்,'' என, வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் அவரது அறிவிப்புகள்:
மிக்ஜாம் புயல் மற்றும் பெரு வெள்ளத்தால், குடியிருப்பு பகுதிகளில் உள்ள மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
எனவே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வீட்டு வசதி வாரியம், தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள மக்களை பாதுகாக்கும் வகையில், குடியிருப்போர் நல சங்கங்களில் உள்ள 500 தன்னார்வலர்களை தேர்வு செய்து, 2 கோடி ரூபாய் செலவில் பேரிடர் மீட்பு பயிற்சி வழங்கப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பதற்கு, மூன்று இடங்களில் நிரந்தர பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண மையங்கள் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
பாதிக்கப்படும் மக்களை வெளியேற்ற தேடல் மற்றும் மீட்பு படகுகள், வாகனங்கள், உபகரணங்களை முன்கூட்டியே நிலை நிறுத்துவது, குடிநீர், பால், ரொட்டி உள்ளிட்ட நிவாரண பொருட்களை முன்கூட்டியே சேகரித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்தார்.