Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/மூன்றாவது சுற்றில் கோகோ * விம்பிள்டன் டென்னிசில் அபாரம்

மூன்றாவது சுற்றில் கோகோ * விம்பிள்டன் டென்னிசில் அபாரம்

மூன்றாவது சுற்றில் கோகோ * விம்பிள்டன் டென்னிசில் அபாரம்

மூன்றாவது சுற்றில் கோகோ * விம்பிள்டன் டென்னிசில் அபாரம்

ADDED : ஜூலை 03, 2024 10:43 PM


Google News
Latest Tamil News
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் மூன்றாவது சுற்றுக்கு அமெரிக்காவின் கோகோ காப் முன்னேறினார்.

இங்கிலாந்தில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில், இத்தொடரின் 'நம்பர்-2' வீராங்கனை அமெரிக்காவின் கோகோ காப், ருமேனியாவின் அன்கா டோடோனியை சந்தித்தார். இதில் காப் 6-2, 6-1 என எளிதாக வெற்றி பெற்று, மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

நேற்று நடந்த முதல் சுற்று போட்டியில் 'நம்பர்-11' வீராங்கனை அமெரிக்காவின் டேனியலி கோலின்ஸ், டென்மார்க்கின் தல்மா காலிப் மோதினர். இதில் டேனியலி 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு முதல் சுற்று போட்டியில் கொலம்பியாவின் கமிலா ஒசோரியோ, 6-3, 6-1 என அமெரிக்காவின் டேவிசை சாய்த்தார்.

டென்மார்க்கில் வோஸ்னியாக்கி, 6-2, 6-0 என அமெரிக்காவின் பார்க்சை வென்றார். மற்ற போட்டிகளில் செக் குடியரசின் சினியகோவா, துனிஷியாவின் ஜபேயுர், கஜகஸ்தானின் புடின்செவா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

சுமித் ஏமாற்றம்

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கிரீசின் டிசிட்சிபாஸ், 7-6, 6-4, 7-5 என்ற நேர் செட்டில் ஜப்பானின் டேனியலை வீழ்த்தினார். நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், செர்பியாவின் லாஜோவிச் ஜோடி, 2-6, 2-6 என்ற நேர் செட்டில் ஸ்பெயினின் மார்டினஸ், முனார் ஜோடியிடம் தோல்வியடைந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us