/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/போராடி வீழ்ந்தார் சுமித் நாகல் * விம்பிள்டன் டென்னிசில்...போராடி வீழ்ந்தார் சுமித் நாகல் * விம்பிள்டன் டென்னிசில்...
போராடி வீழ்ந்தார் சுமித் நாகல் * விம்பிள்டன் டென்னிசில்...
போராடி வீழ்ந்தார் சுமித் நாகல் * விம்பிள்டன் டென்னிசில்...
போராடி வீழ்ந்தார் சுமித் நாகல் * விம்பிள்டன் டென்னிசில்...
ADDED : ஜூலை 02, 2024 11:28 PM

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் போராடி தோல்வியடைந்தார்.
இங்கிலாந்தில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் ('நம்பர்-72') முதன் முறையாக ஒற்றையர் பிரிவில் நேரடியாக களமிறங்கினார். இதில் உலகின் 53வது இடத்திலுள்ள செர்பியாவின் மியோமிர் கெச்மனோவிச்சை சந்தித்தார்.
முதல் செட்டை 2-6 என இழந்த சுமித் நாகல், அடுத்த செட்டை 6-3 என கைப்பற்றி பதிலடி தந்தார். பின் நடந்த இரு செட்டிலும் 3-6, 4-6 என ஏமாற்றினார். முடிவில் சுமித் நாகல் 2-6, 6-3, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.
ஜோகோவிச் வெற்றி
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில், இத்தொடரில் 7 முறை சாம்பியன் ஆன, செர்பியாவின் ஜோகோவிச், செக் குடியரசின் கோப்ரிவாவை 6-1, 6-2, 6-2 என்ற நேர் செட்டில் வென்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
'சாம்பியன்' தோல்வி
பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் நடப்பு சாம்பியன் செக் குடியரசின் மார்கெடா வன்ரோசோவா ('நம்பர்-6'), 86 வது இடத்திலுள்ள ஸ்பெயினின் பவுஜாசிடம் 4-6, 2-6 என தோற்றார். விம்பிள்டன் டென்னிசில் 1994க்குப் பின் நடப்பு சாம்பியனாக இருப்பவர் முதல் சுற்றில் தோல்வியடைந்தார்.
கஜகஸ்தானின் எலினா ரைபகினா, பெல்ஜியத்தின் ரூசை எதிர்கொண்டார். முதல் செட்டை 6-3 என வென்ற ரைபகினா, அடுத்த செட்டை 6-1 என வசப்படுத்தினார். முடிவில் ரைபகினா 6-3, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். மற்ற முதல் சுற்று போட்டிகளில் பிரிட்டனின் ரடுகானு, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சீனாவின் வாங் ஜின் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.