ADDED : ஜூன் 06, 2024 11:47 PM

ஹெய்ல்புரோன்: சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் சுமித் நாகல் முன்னேறினார்.
ஜெர்மனியில் ஆண்களுக்கான சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் இளம் வீரர், 95வது இடத்திலுள்ள சுமித் நாகல், ஸ்பெயினின் பரன்கோ கொசாவோவை எதிர்கொண்டார்.
முதல் செட்டை சுமித் நாகல் 6-4 என கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட இவர், அடுத்த செட்டை 6-1 என எளிதாக வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 25 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் சுமித் நாகல் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார். இதில் ரஷ்யாவின் கஹோவை சந்திக்கவுள்ளார்.