/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/பைனலில் ஸ்வியாடெக் * பிரெஞ்ச் ஓபன் டென்னிசில்...பைனலில் ஸ்வியாடெக் * பிரெஞ்ச் ஓபன் டென்னிசில்...
பைனலில் ஸ்வியாடெக் * பிரெஞ்ச் ஓபன் டென்னிசில்...
பைனலில் ஸ்வியாடெக் * பிரெஞ்ச் ஓபன் டென்னிசில்...
பைனலில் ஸ்வியாடெக் * பிரெஞ்ச் ஓபன் டென்னிசில்...
ADDED : ஜூன் 06, 2024 11:50 PM

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பைனலுக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலகின் 'நம்பர்-1' வீராங்கனை, போலந்தின் இகா ஸ்வியாடெக், 'நம்பர்-3' வீராங்கனை, அமெரிக்காவின் கோகோ காப் மோதினர். இதில் ஸ்வியாடெக் 6-2, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக பைனலுக்கு முன்னேறினார்.
அரையிறுதியில் ஜிவரேவ்
ஆண்களுக்கான ஒற்றையர் காலிறுதியில் 'நம்பர்-4' வீரர் ஜெர்மனியின் ஜிவரேவ், 11வது இடத்திலுள்ள ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினவுரை சந்தித்தார். இதில் ஜிவரேவ் 6-4, 7-6, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் 7வது இடத்திலுள்ள நார்வேயின் கேஸ்பர் ரூடை சந்திக்க உள்ளார்.
போபண்ணா ஜோடி ஏமாற்றம்
ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டென் ஜோடி, இத்தாலியின் சிமோன் போலெல்லி, வவாசோரி ஜோடியை சந்தித்தது. இதில் போபண்ணா ஜோடி 5-7, 6-2, 2-6 என போராடி தோற்றது.
ஜோகோவிச்சிற்கு 'ஆப்பரேஷன்'
உலகின் 'நம்பர்-1' டென்னிஸ் வீரர் செர்பியாவின் ஜோகோவிச் 37. கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 24 கோப்பை வென்று சாதித்தவர். தற்போது நடக்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் நான்காவது சுற்று போட்டியில் இவரது வலது முழங்கால் தசையில் கிழிசல் ஏற்பட, காலிறுதியில் இருந்து விலகினார்.
ஸ்கேன் செய்து பார்த்ததில் காயத்தின் தன்மை அதிகமாக இருந்ததால் உடனடியாக ஆப்பரேஷன் செய்யப்பட்டது. அவர் வெளியிட்ட செய்தியில்,'எனது ஆப்பரேஷன் முடிந்தது. விரைவில் மீண்டு போட்டிகளில் பங்கேற்பேன்,' என தெரிவித்துள்ளார்.