/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/சுமித் நாகல் 'நம்பர்-98': டென்னிஸ் தரவரிசையில் முன்னேற்றம்சுமித் நாகல் 'நம்பர்-98': டென்னிஸ் தரவரிசையில் முன்னேற்றம்
சுமித் நாகல் 'நம்பர்-98': டென்னிஸ் தரவரிசையில் முன்னேற்றம்
சுமித் நாகல் 'நம்பர்-98': டென்னிஸ் தரவரிசையில் முன்னேற்றம்
சுமித் நாகல் 'நம்பர்-98': டென்னிஸ் தரவரிசையில் முன்னேற்றம்
ADDED : பிப் 12, 2024 09:34 PM

புதுடில்லி: ஏ.டி.பி., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் சுமித் நாகல் 98வது இடத்துக்கு முன்னேறினார்.
டென்னிஸ் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது. ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் சுமித் நாகல், 121வது இடத்தில் இருந்து முதன்முறையாக 98வது இடத்துக்கு முன்னேறினார். சமீபத்தில் முடிந்த சென்னை ஓபன் ஒற்றையர் பிரிவில் கோப்பை வென்ற இவர், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் 2வது சுற்று வரை சென்றிருந்தார். இதன்மூலம் ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 'டாப்--100' வரிசையில் இடம் பிடித்த 10வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். கடைசியாக 2019ல் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் இம்மைல்கல்லை எட்டியிருந்தார்.
முதல் மூன்று இடங்களில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ரஷ்யாவின் டேனில் மெட்வெடேவ் நீடிக்கின்றனர்.