/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/இரண்டாவது சுற்றில் சுமித் நாகல் * சென்னை சாலஞ்சர் டென்னிசில் அபாரம்இரண்டாவது சுற்றில் சுமித் நாகல் * சென்னை சாலஞ்சர் டென்னிசில் அபாரம்
இரண்டாவது சுற்றில் சுமித் நாகல் * சென்னை சாலஞ்சர் டென்னிசில் அபாரம்
இரண்டாவது சுற்றில் சுமித் நாகல் * சென்னை சாலஞ்சர் டென்னிசில் அபாரம்
இரண்டாவது சுற்றில் சுமித் நாகல் * சென்னை சாலஞ்சர் டென்னிசில் அபாரம்
ADDED : பிப் 06, 2024 09:58 PM

சென்னை: சென்னை சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் வெற்றி பெற்றார்.
சென்னையில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், சமீபத்திய ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்தியாவின் இளம் வீரர் சுமித் நாகல் களமிறங்கினார். இதில் சக வீரர் பிரஜ்வல் தேவ்வை எதிர்கொண்டார்.
முதல் செட்டை சுமித் நாகல் 6-1 என கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய இவர், 6-2 என வசப்படுத்தினார். முடிவில் சுமித் நாகல் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் சசிக்குமார் முகுந்த், போலந்தின் கஸ்னிகோவ்ஸ்கியை சந்தித்தார். முதல் செட்டை 6-3 என கைப்பற்றிய சசிக்குமார், அடுத்த செட்டை 4-6 என நழுவவிட்டார். பின் சுதாரித்த இவர், மூன்றாவது செட்டை 7-5 என கைப்பற்றினார். முடிவில் சசிக்குமார் 6-3, 4-6, 7-5 என வெற்றி பெற்றார்.
மற்ற போட்டிகளில் பிரான்சின் பிளான்செட், செர்பியாவின் ஸ்வெர்சினா, ஆஸ்திரேலியாவின் பெர்னார்டு டோமிக், இத்தாலியின் வின்சென்ட், நார்டி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.