ADDED : ஜூலை 19, 2024 10:30 PM

புதுடில்லி: சுவிட்சர்லாந்தின் ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற, இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பானோ ஜோடி, 5வது நிலை ஜோடியான நெதர்லாந்தின் ராபின் ஹசே, சாண்டர் அரெண்ட்சை சந்தித்தது.
ஒரு மணி நேரம், 12 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பாம்ப்ரி ஜோடி 6-3, 7-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.