/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/போபண்ணா 'நம்பர்-1': ஏ.டி.பி., டென்னிஸ் தரவரிசையில்போபண்ணா 'நம்பர்-1': ஏ.டி.பி., டென்னிஸ் தரவரிசையில்
போபண்ணா 'நம்பர்-1': ஏ.டி.பி., டென்னிஸ் தரவரிசையில்
போபண்ணா 'நம்பர்-1': ஏ.டி.பி., டென்னிஸ் தரவரிசையில்
போபண்ணா 'நம்பர்-1': ஏ.டி.பி., டென்னிஸ் தரவரிசையில்
ADDED : ஜன 29, 2024 10:35 PM

புதுடில்லி: ஏ.டி.பி., டென்னிஸ் இரட்டையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் போபண்ணா 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார்.
டென்னிஸ் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது. இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா 43, முதன்முறையாக 'நம்பர்-1' இடத்தை கைப்பற்றினார். இதன்மூலம் இச்சாதனை படைத்த 3வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். ஏற்கனவே பயஸ், பூபதி முதலிடம் பிடித்திருந்தனர். தவிர இவர், அதிக வயதில் (43) முதன்முறையாக 'நம்பர்-1' இடம் பிடித்த வீரரானார். இதற்கு முன் 2022 அக்டோபரில் வெளியான தரவரிசையில் அமெரிக்காவின் ராஜிவ் ராம், தனது 38வது வயதில் முதன்முறையாக 'நம்பர்-1' இடம் பிடித்திருந்தார்.
சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலிய ஓபன் ஆண்கள் இரட்டையரில் ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டெனுடன் இணைந்து முதன்முறையாக கோப்பை வென்ற போபண்ணா, இத்தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் 'நம்பர்-1' இடத்தை உறுதி செய்திருந்தார்.
ஆஸ்திரேலியாவின் எப்டென், 2வது இடத்துக்கு முன்னேறினார்.