ADDED : ஜூலை 21, 2024 11:35 PM

ஜிஸ்டாட்: சுவிஸ் ஓபன் டென்னிஸ் இரட்டையரில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பானோ ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
சுவிட்சர்லாந்தில், ஏ.டி.பி., சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அப்பானோ ஒலிவெட் ஜோடி, பிரான்சின் உகோ ஹம்பர்ட், பேப்ரைஸ் மார்டின் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 3-6 என இழந்த பாம்ப்ரி ஜோடி, பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 6-3 எனக் கைப்பற்றியது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 'சூப்பர் டை பிரேக்கரில்' மீண்டும் அசத்திய இந்தியா-பிரான்ஸ் ஜோடி 10-6 என வென்றது.
ஒரு மணி நேரம், 6 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் பாம்ப்ரி-அல்பானோ ஜோடி 3-6, 6-3, 10-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றது. இது, நடப்பு சீசனில் யூகி பாம்ப்ரி கைப்பற்றிய 3வது இரட்டையர் பட்டம். இதில் 2வது முறையாக அல்பானோவுடன் இணைந்து சாம்பியன் ஆனார்.