ADDED : ஜூன் 10, 2024 12:23 AM

புடாபெஸ்ட்: ஹங்கேரி மல்யுத்த தொடரில் இந்தியாவின் ரீத்திகா வெள்ளி வென்றார்.
ஹங்கேரியில், சர்வதேச மல்யுத்த ரேங்கிங் தொடர் நடந்தது. பெண்களுக்கான 76 கிலோ பிரிவில் 5 வீராங்கனைகள் மட்டும் பங்கேற்றதால் 'நார்டிக் சிஸ்டம்' முறையில் போட்டி நடத்தப்பட்டது. இதன்படி ஒவ்வொரு வீராங்கனையும், மற்றவர்களுடன் தலா ஒரு முறை 'ரவுண்டு-ராபின்' முறையில் மோத வேண்டும். முடிவில் 'டாப்-3' இடம் பிடித்தவர்களுக்கு பதக்கம் வழங்கப்படும்.
துருக்கி, கனடா வீராங்கனைகளை வீழ்த்திய இந்தியாவின் ரீத்திகா ஹூடா, கொலம்பிய வீராங்கனையிடம் தோல்வியடைந்தார். கடைசி போட்டியில் ரீத்திகா, ஈகுவடாரின் ரியாஸ்கோ மோதினர். இதில் ரீத்திகா 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். முடிவில் 4 போட்டியில் 3ல் வென்ற ரீத்திகா 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.
இத்தொடரில் இந்தியாவுக்கு 4 வெள்ளிப் பதக்கம் கிடைத்தன. ஏற்கனவே அமன் ஷெராவத் (ஆண்கள் 57 கிலோ), அன்ஷு மாலிக் (பெண்கள் 57 கிலோ), அன்டிம் பங்கல் (பெண்கள் 53 கிலோ) தலா ஒரு வெள்ளி வென்றிருந்தனர்.