/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/சஞ்ஜிவானி முதலிடம்: சர்வதேச தடகளத்தில்சஞ்ஜிவானி முதலிடம்: சர்வதேச தடகளத்தில்
சஞ்ஜிவானி முதலிடம்: சர்வதேச தடகளத்தில்
சஞ்ஜிவானி முதலிடம்: சர்வதேச தடகளத்தில்
சஞ்ஜிவானி முதலிடம்: சர்வதேச தடகளத்தில்
ADDED : ஜூன் 10, 2024 12:19 AM

நோட்வில்: உலக 'பாரா' கிராண்ட் பிரிக்ஸ் தடகளத்தில் இந்தியாவின் சவுரப் சர்மா 2 தங்கம் வென்றார்.
சுவிட்சர்லாந்தில், உலக 'பாரா' கிராண்ட் பிரிக்ஸ் தடகளம் நடந்தது. ஆண்களுக்கான 1500, 5000 மீ., 'டி12' பிரிவு ஓட்டத்தில் இந்தியாவின் சவுரப் சர்மா தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த இவர், தேசிய அளவிலான போட்டியில் 7 தங்கம் வென்றிருந்தார்.
சஞ்ஜிவானி முதலிடம்
அமெரிக்காவின் போர்ட்லாண்டில் நடந்த சர்வதேச தடகள போட்டிக்கான 10,000 மீ., ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சஞ்ஜிவானி ஜாதவ் (32 நிமிடம், 22.77 வினாடி) முதலிடம் பிடித்தார். ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற இவர், கடந்த ஆண்டு நடந்த இப்போட்டியில் 2வது இடம் பிடித்திருந்தார்.
மற்றொரு இந்திய வீராங்கனை சீமா (32 நிமிடம், 55.91 வினாடி) 5வது இடத்தை கைப்பற்றினார்.
ஆண்களுக்கான 3000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் (8 நிமிடம், 21.85 வினாடி) 2வது இடத்தை தட்டிச் சென்றார். இந்தியாவின் பருல் சவுத்தரி (9 நிமிடம், 15.31 வினாடி) பெண்களுக்கான 3000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டத்தில் 3வது இடத்தை கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீராங்கனை பிரித்தி (10 நிமிடம், 12.88 வினாடி) 20வது இடம் பிடித்தார்.