/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/மல்யுத்த வீரர் ஓட்டம் * ஊக்கமருந்து சோதனைக்கு பயந்து...மல்யுத்த வீரர் ஓட்டம் * ஊக்கமருந்து சோதனைக்கு பயந்து...
மல்யுத்த வீரர் ஓட்டம் * ஊக்கமருந்து சோதனைக்கு பயந்து...
மல்யுத்த வீரர் ஓட்டம் * ஊக்கமருந்து சோதனைக்கு பயந்து...
மல்யுத்த வீரர் ஓட்டம் * ஊக்கமருந்து சோதனைக்கு பயந்து...
ADDED : பிப் 06, 2024 09:30 PM

ஜெய்ப்பூர்: தேசிய மல்யுத்த போட்டியில் பதக்கம் வென்ற வீரர், ஊக்கமருந்து சோதனையில் பங்கேற்காமல் ஓட்டம் பிடித்தார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு, தற்காலிக குழு சார்பில் 'சீனியர்களுக்கான' தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப், ஜெய்ப்பூரில் நடக்கிறது. ஆண்கள் பிரீஸ்டைல் பிரிவு பைனல் நடந்தது. இதில் வேறு பெயர் பொறித்த ஜெர்சியுடன் வீரர் ஒருவர் களமிறங்கினார். போட்டியின் போது தேசிய ஊக்கமருந்து தடுப்பு மைய (என்.ஏ.டி.ஏ.,) அதிகாரிகள் வந்திருந்தனர்.
இதைப்பார்த்த அந்த வீரர், போட்டி முடிந்ததும் தனது ஜெர்சியை கழற்றி விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஊக்கமருந்து சோதனைக்காக என்.ஏ.டி.ஏ., அதிகாரிகள் அவரை துரத்த, ரயில்வே மைதானத்தில் இருந்து மின்னல் வேகத்தில் தப்பினார் அந்த வீரர். அவர் கொடுத்த விபரங்களை வைத்து, தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவை அனைத்தும் போலி என தெரியவந்தது.
இதுகுறித்து என்.ஏ.டி.ஏ.,வை சேர்ந்த ஒருவர் கூறுகையில்,'' பைனல் முடிந்ததும், ஊக்கமருந்து சோதனைக்கு வருமாறு அழைத்தோம். ஆனால் அவர் தப்பி விட்டார்,'' என்றார். வீரர் பெயர், முகவரி என எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஹரியானாவை சேர்ந்தவராக இருக்கலாம்.