Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

ADDED : செப் 24, 2025 10:25 PM


Google News
Latest Tamil News
அரையிறுதியில் இத்தாலி

பசே சிட்டி: பிலிப்பைன்சில் நடக்கும் உலக வாலிபால் சாம்பியன்ஷிப் காலிறுதியில் இத்தாலி, பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் இத்தாலி அணி 3-0 (25-13, 25-18, 25-18) என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

பைனலில் தென் கொரியா

அம்மான்: ஜோர்டானில், ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் (17 வயது) நடக்கிறது. இதன் அரையிறுதியில் தென் கொரிய அணி 36-35 என, கத்தாரை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் ஈரான் அணி 37-19 என, பஹ்ரைனை வென்றது.

ஆஸ்திரேலியா 'ஹாட்ரிக்'

செரம்பன்: மலேசியாவில் நடக்கும் பெண்கள் (16 வயது) ஆசிய கோப்பை கூடைப்பந்து ('டிவிசன்-ஏ') லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 126-46 என சீன தைபேயை வீழ்த்தியது. ஏற்கனவே பிலிப்பைன்ஸ், தென் கொரியாவை வென்ற ஆஸ்திரேலியா, 'ஹாட்ரிக்' வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.

ரியல் மாட்ரிட் முதலிடம்

பார்சிலோனா: ஸ்பெயினில் நடக்கும் 'லா லிகா' கோப்பை கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 4-1 என லெவான்டே அணியை வீழ்த்தியது. இதுவரை விளையாடிய 6 போட்டியிலும் வெற்றி பெற்ற ரியல் மாட்ரிட் (18 புள்ளி) முதலிடத்தில் உள்ளது.

எக்ஸ்டிராஸ்

* சர்வதேச 'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ஐ.சி.சி., தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா (பேட்டர்), வருண் சக்ரவர்த்தி (பவுலர்), ஹர்திக் பாண்ட்யா ('ஆல்-ரவுண்டர்') 'நம்பர்-1' இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.

* இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நடக்கும் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் (17 வயது) அரையிறுதியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதுகின்றன.

* டில்லியில் இன்று ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் துவங்குகிறது. இதில் இந்தியாவின் ரைசா தில்லான், சபீரா ஹாரிஸ் உள்ளிட்டோர் பதக்கம் வென்று சாதிக்கலாம்.

* குளோபல் செஸ் லீக் 3வது சீசனுக்கான (டிச. 13-24, சென்னை) வீரர்கள் தேர்வு, மும்பையில் நாளை நடக்கிறது. இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, நெதர்லாந்தின் அனிஷ் கிரி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us