/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/உலக ஜிம்னாஸ்டிக்ஸ்: பைனலில் பிரனதிஉலக ஜிம்னாஸ்டிக்ஸ்: பைனலில் பிரனதி
உலக ஜிம்னாஸ்டிக்ஸ்: பைனலில் பிரனதி
உலக ஜிம்னாஸ்டிக்ஸ்: பைனலில் பிரனதி
உலக ஜிம்னாஸ்டிக்ஸ்: பைனலில் பிரனதி
ADDED : மார் 21, 2025 10:30 PM

அன்டால்யா: ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பை 'வால்ட்' பிரிவு பைனலுக்கு இந்திய வீராங்கனை பிரனதி நாயக் முன்னேறினார்.
துருக்கியில், ஜிம்னாஸ்டிக்ஸ் 'அப்பாரடஸ்' உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதில் பெண்களுக்கான 'வால்ட்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் பிரனதி நாயக் 29, பங்கேற்றார். இதில் பிரனதி, 13.317 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார். முதலிரண்டு இடங்களை அமெரிக்காவின் ஜெய்லா ஹேங் (13.783 புள்ளி), கிளேர் பீஸ் (13.584) கைப்பற்றினர். பைனல் இன்று நடக்கிறது.
ஆசிய சாம்பியன்ஷிப் 'வால்ட்' பிரிவில் 2 முறை (2019, 2022) வெண்கலம் கைப்பற்றிய பிரனதி, கடந்த ஆண்டு எகிப்தில் நடந்த 'ஆர்டிஸ்டிக்' உலக கோப்பை 'வால்ட்' பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் களமிறங்கிய பிரனதி, தீபா கர்மாகருக்கு பின் ஒலிம்பிக்கில் பங்கேற்ற 2வது இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையானார்.