/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தமிழகத்தின் ரமேஷ் 'தங்கம்': பாரா விளையாட்டில் அசத்தல்தமிழகத்தின் ரமேஷ் 'தங்கம்': பாரா விளையாட்டில் அசத்தல்
தமிழகத்தின் ரமேஷ் 'தங்கம்': பாரா விளையாட்டில் அசத்தல்
தமிழகத்தின் ரமேஷ் 'தங்கம்': பாரா விளையாட்டில் அசத்தல்
தமிழகத்தின் ரமேஷ் 'தங்கம்': பாரா விளையாட்டில் அசத்தல்
ADDED : மார் 21, 2025 10:39 PM

புதுடில்லி: 'கேலோ இந்தியா பாரா' விளையாட்டு 'வீல்சேர்' போட்டியில் தமிழகத்தின் ரமேஷ் தங்கம் வென்றார்.
டில்லியில், மாற்றுத்திறனாளிகளுக்கான 'கேலோ இந்தியா பாரா' விளையாட்டு 2வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான 800 மீ., (டி53/டி54) 'வீல்சேர்' ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தின் ரமேஷ் ஷண்முகம் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
சென்னையை சேர்ந்த ரமேஷ் ஷண்முகம், திருச்சியில் உள்ள விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர். எட்டாவது வயதில் நடந்த லாரி விபத்தில் தனது இடது காலை இழந்தார். துவக்கத்தில் கூடைப்பந்து விளையாடிய இவர், பின் 'வீல்சேர்' போட்டியில் பங்கேற்றார். கடந்த 2023ல் நடந்த 'கேலோ இந்தியா பாரா' விளையாட்டில் வெண்கலம் வென்றிருந்தார்.
இதுகுறித்து ரமேஷ் ஷண்முகம் கூறுகையில், ''என் வாழ்க்கையில் நிறைய போராட்டங்களை சந்தித்துள்ளேன். ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. ஒவ்வொரு நாளும் என்னை, நானே ஊக்கப்படுத்திக் கொண்டேன். முதல் சீசனில் வெண்கலம் கைப்பற்றினேன். தற்போது தங்கம் வென்றுள்ளேன். எனது பெற்றோர் மகிழ்ச்சியாக உள்ளனர். எனது குடும்பத்தினரின் ஆதரவு இல்லாமல் என்னால் இந்த அளவிற்கு சாதித்திருக்க முடியாது,'' என்றார்.
இதுவரை 9 தங்கம், 5 வெற்றி, 6 வெண்கலம் என, 20 பதக்கங்களுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இரு இடங்களில் ஹரியானா (6 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலம்), உ.பி., (5 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம்) உள்ளன.