/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/வெள்ளி நாயகன் ரத்தோர்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்வெள்ளி நாயகன் ரத்தோர்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
வெள்ளி நாயகன் ரத்தோர்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
வெள்ளி நாயகன் ரத்தோர்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
வெள்ளி நாயகன் ரத்தோர்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
ADDED : ஜூலை 15, 2024 11:00 PM

கிரீஸ் தலைநகர் ஏதென்சில் 28வது ஒலிம்பிக் போட்டி (2004, ஆக. 13-29) நடந்தது. 2001 செப்., 11ல் அமெரிக்கா மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின் நடந்த ஒலிம்பிக் என்பதால், வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 70 ஆயிரம் போலீசார், ஏதென்ஸ் நகர பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
துப்பாக்கி சுடுதல் 'டபுள் டிராப்' பிரிவில் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வெள்ளி வென்றார். 104 ஆண்டுகளுக்கு பின், ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியர் என்ற பெருமை பெற்றார். கடைசியாக 1900ல் நடந்த பாரிஸ் ஒலிம்பிக் தடகளத்தில் (200 மீ., ஓட்டம், 200 மீ., தடை தாண்டும் ஓட்டம்) நார்மன் பிரிட்சார்ட் இரண்டு வெள்ளி வென்றிருந்தார். ராணுவத்தில் மேஜர் அந்தஸ்தில் பணியாற்றிய ரத்தோர், மத்திய அமைச்சராக இருந்தார்.
சிலி, சீனதைபே, டொமினிகா, ஜார்ஜியா, இஸ்ரேல் நாடுகள் ஒலிம்பிக்கில் முதன்முறையாக தங்கம் வென்றன. பராகுவே, தனது முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றது. 36 தங்கம், 39 வெள்ளி, 26 வெண்கலம் என 101 பதக்கம் வென்ற அமெரிக்கா முதலிடத்தை கைப்பற்றியது. கிரீஸ் 15வது (6 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம்) பிடித்தது. இந்தியா 65வது இடத்தை பெற்றது.