/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/சிப்ட் கவுர் 'வெண்கலம்': உலக துப்பாக்கி சுடுதலில்சிப்ட் கவுர் 'வெண்கலம்': உலக துப்பாக்கி சுடுதலில்
சிப்ட் கவுர் 'வெண்கலம்': உலக துப்பாக்கி சுடுதலில்
சிப்ட் கவுர் 'வெண்கலம்': உலக துப்பாக்கி சுடுதலில்
சிப்ட் கவுர் 'வெண்கலம்': உலக துப்பாக்கி சுடுதலில்
ADDED : ஜூன் 07, 2024 11:03 PM

முனிக்: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் வெண்கலம் வென்றார்.
ஜெர்மனியில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்' / 'பிஸ்டல்') நடந்தது. பெண்களுக்கான 50 மீ., 'ரைபிள்-3 பொஷிசன்ஸ்' பிரிவு பைனலில் இந்தியாவின் சிப்ட் கவுர் சாம்ரா, 452.9 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். சீனாவின் ஹான் ஜியாயு (462.6 புள்ளி) வெள்ளி வென்றார். பிரிட்டனின் செனாய்டு மெக்கின்டோஷ் (466.7) தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
இத்தொடரில் ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என 2 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 3வது இடத்தை பிரான்சுடன் பகிர்ந்து கொண்டது. முதலிரண்டு இடங்களை சீனா (4 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம்), வடகொரியா (ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்) பிடித்தன. ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் தங்கம் வென்றார்.