/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/இந்தியாவுக்கு 4 பதக்கம்: ஆசிய சைக்கிள் பந்தயத்தில்இந்தியாவுக்கு 4 பதக்கம்: ஆசிய சைக்கிள் பந்தயத்தில்
இந்தியாவுக்கு 4 பதக்கம்: ஆசிய சைக்கிள் பந்தயத்தில்
இந்தியாவுக்கு 4 பதக்கம்: ஆசிய சைக்கிள் பந்தயத்தில்
இந்தியாவுக்கு 4 பதக்கம்: ஆசிய சைக்கிள் பந்தயத்தில்
ADDED : ஜூன் 07, 2024 11:11 PM

அல்மாட்டி: ஆசிய ரோடு சைக்கிள் பந்தயத்தில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் உட்பட 4 பதக்கம் கிடைத்தன.
கஜகஸ்தானில், ஆசிய ரோடு சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெண்கள் 'எலைட்' தனிநபர் 'டைம் டிரையல் சி2' பிரிவில் இந்தியாவின் ஜோதி கதேரியா தங்கம் வென்றார். ஆண்களுக்கான 'எலைட்' தனிநபர் 'டைம் டிரையல் சி2' பிரிவில் இந்தியாவின் அர்ஷத் ஷேக் வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
ஆண்களுக்கான 'எலைட்' தனிநபர் 'டைம் டிரையல் எச்4' பிரிவில் இந்தியாவின் பிரஷாந்த் ஆர்கல் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். ஆண்களுக்கான 'எலைட்' தனிநபர் 'டைம் டிரையல் எச்3' பிரிவில் இந்தியாவின் யோகேஷ் அஹிரே வெண்கலம் வென்றார். 'பாரா' பிரிவில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன.