/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தங்கம் வென்றார் தேஜஸ்வினி * ஜூனியர் உலக துப்பாக்கிசுடுதலில்...தங்கம் வென்றார் தேஜஸ்வினி * ஜூனியர் உலக துப்பாக்கிசுடுதலில்...
தங்கம் வென்றார் தேஜஸ்வினி * ஜூனியர் உலக துப்பாக்கிசுடுதலில்...
தங்கம் வென்றார் தேஜஸ்வினி * ஜூனியர் உலக துப்பாக்கிசுடுதலில்...
தங்கம் வென்றார் தேஜஸ்வினி * ஜூனியர் உலக துப்பாக்கிசுடுதலில்...
ADDED : மே 26, 2025 10:05 PM

சுஹ்ல்: ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் தேஜஸ்வினி தங்கம் கைப்பற்றினார்.
ஜெர்மனியில் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் நடக்கிறது. இதில் பெண்களுக்கான 25 மீ., பிஸ்டல் பிரிவில் போட்டி நடந்தது. இந்தியாவின் தேஜஸ்வினி, 575 புள்ளி எடுத்து 4வது இடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீராங்கனைகள் ரியா ஷிரிஷ் (569, 15வது இடம்), நாம்யா (568, 18) ஏமாற்றினர்.
அடுத்து பைனலில் துவக்கத்தில் இருந்தே அசத்தினார். முடிவில் 31 புள்ளியுடன் முதலிடம் பெற்று, தங்கம் கைப்பற்றினார். இத்தொடரில் இந்தியா வென்ற 3வது தங்கம் இது. பெலாரசின் அலினா (29), ஹங்கேரியின் மிரியம் (23) அடுத்த இரு இடம் பிடித்தனர்.
இதுவரை 3 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என 11 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. சீனா (3 தங்கம், ஒரு வெண்கலம்) 2வது இடத்தில் உள்ளது.