/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/இந்தியாவிடம் வீழ்ந்தது உருகுவே * ஜூனியர் ஹாக்கியில் அபாரம்இந்தியாவிடம் வீழ்ந்தது உருகுவே * ஜூனியர் ஹாக்கியில் அபாரம்
இந்தியாவிடம் வீழ்ந்தது உருகுவே * ஜூனியர் ஹாக்கியில் அபாரம்
இந்தியாவிடம் வீழ்ந்தது உருகுவே * ஜூனியர் ஹாக்கியில் அபாரம்
இந்தியாவிடம் வீழ்ந்தது உருகுவே * ஜூனியர் ஹாக்கியில் அபாரம்
ADDED : மே 26, 2025 10:02 PM

ரோசாரியோ: ஜூனியர் பெண்களுக்கான ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி 3-2 என உருகுவேயை வீழ்த்தியது.
அர்ஜென்டினாவில், நான்கு நாடுகள் பங்கேற்கும் ஜூனியர் பெண்களுக்கான சர்வதேச ஹாக்கி தொடர் நடக்கிறது. இந்தியா, அர்ஜென்டினா, சிலி, உருகுவே அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் இந்தியா, சிலியை வீழ்த்தியது.
நேற்று தனது இரண்டாவது போட்டியில் இந்தியா, உருகுவேயை எதிர்கொண்டது. 3வது நிமிடம் கிடைத்த பெனால்டி கார்னரில் உருகுவேயின் செய்கல் ஒரு கோல் அடித்தார். இந்தியாவின் சோனம் (21) ஒரு கோல் அடித்தார். மறுபக்கம் அகஸ்டினா (24, உருகுவே) கோல் அடிக்க, இந்தியா 1-2 என பின்தங்கியது.
46 வது நிமிடம் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னரை கோலாக மாற்றினார் கனிகா. தொடர்ந்து அசத்திய இவர், பீல்டு கோல் (50) அடித்து கைகொடுக்க, இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இன்று இந்திய அணி அர்ஜென்டினாவை சந்திக்கிறது.